இந்திய அளவில் அறிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை..!

இந்திய அளவில் அறிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

பெண்ணின் வயிற்றில் இருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டி நுட்பமான அறுவை சிகிச்சையில் அகற்றம்

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வழியினால் அவதிப்பட்டு இருக்கின்றார். அடிவயிற்றில் லேசான வலியுடன் வயிறு வீக்கமாக ஆரம்பித்த இவருக்கான உடற் குறைபாடு, தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே இருந்து இருக்கின்றன. பின்னர் வயிறு வீக்கம் பெரிதாகவே, தமிழ்ச்செல்வி கடும் வலியுடன் அவதிப்பட்டு வந்தார். மூச்சு விட முடியாமலும் திணறி இருக்கின்றார் . இதனைத் தொடர்ந்து அவர் ராமநாரபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதித்து ஸ்கேனில் பார்த்த போது, தமிழ் செல்வியின் வயிற்றில் ராட்சச கட்டி வளர்ந்து இருப்பது தெரிய வந்தன. இந்த கட்டியானது தமிழ்ச்செல்வியின் சினைப்பையில் வளர்ந்திருக்கின்றன . அது வயிற்று பகுதியில் உள்ள நுரையீரல் , குடல் , சிறுநீரகம் , ரத்த நாளங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை அழுத்திக் கொண்டிருந்தன.

பல்வேறு துறைகளை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவினர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சையிலே ஈடுபட்டனர் . சுமார் 4 மணி நேரம் 30 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், தமிழ் செல்வியின் வயிற்று பகுதியில் இருந்த 36 கிலோ அளவிலான ராட்சத ஒவேரியன் கேன்சர் கட்டி அகற்றப்பட்டது.

. தற்பொழுது நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் குணமடைந்து வருகின்றார்.

பெண் வயிற்றில் இருந்து 36 கிலோ எடையுடன் கட்டி அகற்றப்பட்டது இந்திய அளவில் இது இரண்டாவது முறை. முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 40 கிலோக்கு மேல் எடையுடன் கூடிய கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகின்றன.

கடினமான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பல தரப்பினரும் வெகுபாக பாராட்டினர்.