கோவை அருகே போலீஸ் நிலையம் முன் திருட்டு வழக்கில் சிக்கிய விசாரணை கைதி – லாரி மோதி பலி..

கோவை அருகே போலீஸ் நிலையம் முன் திருட்டு வழக்கில் சிக்கிய விசாரணை கைதி – லாரி மோதி பலி.. கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவில்குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பைக்கை திருட முயன்றார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்திக் (வயது 28) என்பதும், அவர் தனது மனைவியுடன் வேலை தேடி கோவை அன்னூர் பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது .இந்த நிலையில் நேற்று மாலைகோவில்பாளையம் காவல் நிலையத்தில் கார்த்திக் மற்றும் அவரது மனைவியிடம்போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் தாகமாக உள்ளது தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்து ரோட்டைகடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் கார்த்திக் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் விசாரணைக்கு வந்த வாலிபர் மனைவி கண்முன் லாரி மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.