கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை..

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை..கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.இது கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் கருதப்படுகிறது..கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த கோவிலில் 24 மணி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..இந்த நிலையில் இன்று அதிகாலையில் பூஜை செய்வதற்காக கோவிலை குருக்கள் திறந்தார். அப் போதுகோவில் வளாகத்தில் உள்ள ஆதி கோனியம்மன் கோவில் முன் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து கோவில் நிர்வாக கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உக்கடம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்”உண்டியலில் எவ்வளவு பணம் – நகை இருந்தது என்று தெரியவில்லை.கோவில் பின்புறம் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இந்த கொள்ளையை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது..24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு உள்ள இந்த கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.