சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்கப்படுத்துதல் பயிற்சி.

எண்ணை வித்து பயிர்கள் மற்றும் சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்கப்படுத்துதல் பயிற்சி.

 

 

 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கும்பரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு பின் எண்ணை வித்துபயிர்கள் மற்றும் சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்கப்படுத்துதல் குறித்த பயிற்சி . திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் ராம்குமார் பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு பின் உளுந்து பச்சை பயிறு போன்ற பயறு வகை பயிர்களை சாகுபடி செய்தல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கும் (pulses wonder) பயறு ஒண்டர் எனப்படும் சத்துக்கள் அடங்கிய பவுடரை பூக்கும் தருணத்தில் தண்ணீரில் கலந்து இலை வழியே தெளிக்கும் பொழுது நன்கு காய் பிடித்து மகசூல் அதிகரிக்கும் என கூறினார். மேலும் பெயர் வகை பயிர்களை தாக்கும் அசுவினி காய்த்துளைப்பான் புகையிலை வெட்டுக் புழு மற்றும் மஞ்சள் தேமல் வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் குறித்தும் பயிற்சி வழங்கினார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் தானியங்களை சேமிக்கும் பொழுது பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கிப் பேசினார், உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் மோனிஷா, விவசாயிகளிடையே வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாய அடையாள எண் பதிவுத்தரவு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பது குறித்து கூறி விவசாயிகள் வரும் ஏப்ரல்.30 அன்று பதிவு செய்ய கடைசி நாள் ஆகவே விவசாய பெருமக்கள் விவசாய அடையாள எண்ணை விரைந்து அருகாமையில் உள்ள வேளாண் விரிவாக்கம் மையம் அல்லது பொது இ சேவை மையம் அல்லது தங்களுடைய ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கூறினார். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் தாமஸ் , வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா செய்திருந்தார்