திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் மிக்கி மவுஸ் வேடம் அணிந்து நடனம் நடைபெற்றது மேலும் அன்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் திறமைகளை வெளி கொண்டு வரும் வகையில் அவர்களின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் அவர்கள் கல்வி பயில பயன்படுத்தும் தேவையான பொருட்கள் பரிசுகளாக வழங்கி அவர்கள் உண்ண உணவும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில்
சமூக ஆர்வலர் ஆர்ம்ஸ்ட்ராங் ரபி தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிறுவனருமான ஆர்.ஏ.தாமஸ் தின சேவை அறக்கட்டளையின் நிறுவனர் திரு சிவப்பிரகாசம் பகவதி நாட்டுக்கு நல்லது செய்வோம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு கணேஷ் வினை செய் அறக்கட்டளையின் நிறுவனர் திரு G.V.கார்த்திக் நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பினை சேர்ந்த திரு அமல்ராஜ் புதிய பாதை அறக்கட்டளையின் நிறுவனர் செல்வி தீபலட்சுமி அறங்காவலர் திரு அருணாச்சலம் அவர்கள் தாய் நேசம் அறக்கட்டளையி ஆலோசகர் ஜான்சன் பாஸ்டர் டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்நிகச்சிக்கான ஏற்பாடுகளை தாய் நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் திருமதி ஹப்சி சத்தியாராக்கினி தலைமையில்
தாய்நேசம் அறக்கட்டளையின் அறன்காவலர் சுதா ஒருங்கிணைப்பாளர் திருமதி. கீதா செயலாளர் பிரேமா இளம் பெண்கள் அணி தலைவி அபிஷா அறங்காவலர்கள் பட்டுராஜ் செல்வராஜ் பகவதி சங்கர் வீரமாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஏராளமான பள்ளி குழந்தைகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.