போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய கோவை போலீஸ்காரர் ஸ்ரீதரன் சஸ்பெண்ட்’.3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு. கோவை மே 14 கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த சுஜி மோகன் ( வயது 26 )பிரவீன் (வயது 29) பிரசாந்த் ( வயது 26) அமர்நாத் (வயது29) அஸ்வின் குமார் (வயது 26) பிரவீன் ராஜ் (வயது27) வடவள்ளி பிரதீப் (வயது 29) ஆகிய 7பேரை கோவை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகர சேர்ந்த போலீஸ்காரர் ஸ்ரீதர் (வயது 29) என்பவர் தான் தங்களுக்கு திட்டம் போட்டு கொடுத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு உதவியதாக தெரிவித்தனர். மேலும் போலீஸ்காரர்ஸ்ரீதர் போதை கும்பலுடன் வாட்ஸ்அப் காலில் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர் போலீசார் எங்கு? எப்போது? ரோந்து வருவார்கள்.. போதை மருந்து எப்படி கடத்தி வர வேண்டும். யாரிடம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என திட்டம் வகுத்துக் கொடுத்து மூளையாக செயல்பட்டு போதை கும்பலை வழி நடத்தியதும் விசாரணை தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார் .அவருக்கும் ரவுடி கும்பல், மற்றும் போதை கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீஸ்காரரஸ்ரீதரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் . மேலும் சிறையில் உள்ள போலீஸ்காரர் ஸ்ரீதரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இந்த விசாரணையில் அவர் போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு எவ்வளவு சம்பாதித்து உள்ளார்? எங்கெங்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார்?என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும்.