ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீவைப்பு..!

ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீவைப்பு..! கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்துக்கு நேற்று இரவு யாரோ 3 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று பெட்ரோல் ஊற்றிஅலுவலகத்துக்கு தீ வைத்தனர்.. இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்தி .சிவராஜ் ஆகியோர் பார்த்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.