போலி ஆவணங்கள் மூலம் கோவை வங்கியில் 1.28 கோடி மோசடி – வங்கி அதிகாரி, கணவன், மனைவி, டாக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு..!

கோவை பி. என். புதூரைச் சேர்ந்தவர் ஜாலி பால். இவர்  இளங்கோவன் என்பவரிடம் அரை சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முன்பாக ரூ10 லட்சம் கொடுத்து இருந்தார் .இதற்காக நில உரிமையாளர் இளங்கோவன் பவர் உரிமை வழங்கினார் .இந்த நிலையில் இளங்கோவன் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் .இதையடுத்து இளங்கோவனின் மனைவி ஜானகி ஜாலி பாலிடம் மேலும் ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு விற்பனை பத்திரம் பதிவு செய்துள்ளார் . முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த மயில்வாகனன் என்பவருக்கும் இறந்து போன இளங்கோவன் பவர் வழங்கியதாக கூறப்படுகிறது. இளங்கோவன் இறந்ததை தொடர்ந்து அந்த பவருக்கு உரிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டது .ஆனாலும் மயில்வாகனன் நிலத்தை மோசடி செய்ய திட்டமிட்டு அசல் பத்திரங்கள் தொலைந்து விட்டதாக மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன் பிறகு அசல் பத்திரத்தை கண்டறிய முடியவில்லை என்று போலீசில் சான்றிதழ் பெற்றுள்ளார் .அதன் பிறகு அவர் டாக்டர் ராஜகோபாலன் என்பவரை அணுகி இளங்கோவன் உயிரோடு இருப்பதாக சான்றிதழ் பெற்று உள்ளார். இதை தொடர்ந்து மயில்வாகனன் அந்த நிலத்தை தனது மனைவி கஸ்தூரியின் பெயரில் பத்திர பதிவு செய்துள்ளார். அந்த நிலபத்திரத்தை கஸ்தூரி கோவை சுங்கம் கனரா வங்கி கிளையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு அடமானம் வைத்து ரூ 1 கோடியே 28 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதற்கு இளங்கோவின் மனைவி ஜானகி என்பவரும் கடிதம் கொடுத்துள்ளார் .இது குறித்து ஜாலி பால் அளித்த புகார் பேரில் கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் மயில்வாகனன், அவரது மனைவி கஸ்தூரி, சான்றிதழ் அளித்த டாக்டர். ராஜகோபாலன், ஜானகி, வங்கி அதிகாரி ஆகிய 5பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.