கோவை ஐடி இன்ஜினியரிடம் ரு.1 கோடி 63 லட்சம் ஆன்லைன் மோசடி – போலீசில் புகார்..!

கோவை தொண்டாமுத்தூர் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் விவேக் ( வயது 43) ஐ.டி நிறுவன மென்பொருள் பொறியாளராக உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் ஐ.டி. நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயார் செய்து கொடுத்து வந்தார். இவரதுவாட்ஸ் அப்புக்கு 24-5-2024 அன்று ஒரு மெசேஜ் வந்தது. அதில் தங்களிடம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பி விவேக் 29 தவணைகளில் வங்கி மூலம் ரூ 1 கோடியே 63 லட்சம் அனுப்பி வைத்தார். அதன் பிறகு எந்த பதிலும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..