தமிழகத்தில் மோசடி செய்பவர்கள் பலவிதம். அதில் இது தனிவிதம். சோழவரம் அடுத்த ஞாயிறு போஸ்ட் கன்னியம்பாளையம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் கிரு ஸ்டப்ப ரெட்டியின் மகன் கேசவன் வயது 57. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கரை மக்கள் குறை கேட்கும் முகாமில் நேரில் சந்தித்து புகார் மனு கடந்த 18.3.2022 முதல் 19.8.2022 வரை விருப்பாச்சி வயது 4 5.என்பவன் என்னை சந்தித்து அரிசி பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவைகளை சப்ளை செய்து தருவதாக பெரிய யோக்கியன் போல் கூறி ரூபாய் 1 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 750ஐ பணமாகப் பெற்றுக் கொண்டு பொருட்களை சப்ளை செய்யாமலும் என்னிடமே மேலே குறிப்பிட்டு பொருட்களை பெற்றுக் கொண்டு அதற்காக ரூபாய் 40 லட்சத்து 50 ஆயிரம் வரை பணத்தைக் கொடுக்காமலும் ஆக மொத்தம் ரூ 1 கோடியே 69 லட்சத்து 70 ஆயிரத்து 750 வரை ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் சங்கரின் உத்தரவின் படி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் அதிரடி போலீஸ் படையினருடன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கேடி விருப்பாச்சியை வயது 45. தகப்பனார் பெயர் மாணிக்கம். பெருமாள் கோவில் தெரு ஒரக்காடு. திருவள்ளூர் மாவட்டம் என்பவனைப் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.