ஆவடி : சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏமாற்று ஆசாமிகள் பல கோடி மோசடி செய்வதாக போலீசுக்கு சரமாரியாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு பகுதியில் வேப்பம்பட்டு பகுதியில் தீபாவளி பண்டு, நகை பண்டு ,மளிகைக் பண்டு ஏல சீட்டு நடத்தி 350க்கும் மேற்பட்ட நபர்களிடம் மோசடி செய்ததாக திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் பட்டு வேப்பம்பட்டு ராகவேந்திரா கார்டன் பகுதியில் உள்ள விஜயகுமார் என்பவர் இதே பகுதியில் உள்ள மஞ்சுளா மற்றும் அவரது கணவர் பிரேம் ஆனந்த் மற்றும் ஈஸ்வரி என்கிற அம்மு கூட்டாக சேர்ந்து மஞ்சுளா மளிகை கடை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக ஏராளமானோரிடம் ரூபாய் 1 கோடியே 80 லட்சம் வசூலித்து பணத்தையும் பொருட்களையும் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இது குறித்து ஆண்களும் பெண்களும் திரளாக போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க புகார் அளித்தனர் . அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாளுக்கு விசாரித்து சரியான நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி மற்றும் போலீஸ் படையினர் தீவிரமாக துப்பு துலக்கி குற்றவாளிகள் பிரேம் ஆனந்த் மஞ்சுளா ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் நாங்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக இருந்தோம். எங்களை இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி சாமர்த்தியமாக கைது செய்து விட்டார். எனக்கு சொந்தமான இரண்டு வீடுகள் உள்ளன அவற்றை விற்றுவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 80 லட்சத்தை கொடுத்து விடுங்கள் என வாக்கு மூலம் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்..