என்ஜினியர் – சமூக ஆர்வலரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 கோடி மோசடி.!!

கோவை கணபதி கே. ஆர். ஜி : நகரை சேர்ந்தவர் பட்டாபிராமன் ( வயது 65) சமூக ஆர்வலர். இவர் 1983 ஆம் ஆண்டு முதல் மலைவாழ் மக்கள் மறுவாழ்வு பணிகளை செய்து வருகிறார். இவரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அறிமுகமான நபர்கள் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். அதிகப்பணம் கிடைத்தால் பிறருக்கு உதவ முடியும் என்ற கருதிய பட்டாபிராமன் ஆன்லைனில் 14 தவணைகளாக ரூ.90 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அவர்கள் கூறியது போல லாபம் கிடைக்கவில்லை. செலுத்திய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அந்த ஆசாமிகளை தொடர்பு கொள்ள முடிந்த போது முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டாபிராமன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

இதே போல துடியலூரைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 42) என்ஜினியர். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வாட்ஸ் அப்பிற்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற குறுஞ்செய்தி வந்தது .அதை நம்பி அவர் 7 தவணைகளில் ரூ 10 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு செலுத்திய பணமும், லாபமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.