1 கோடி பனை மரங்கள்- செப்டம்பர் முதல் நட முடிவு..!

னைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனைமரங்களின் நட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரம் வரும் செப்டம்பர் முதல் விதைகள் நட முடிவெடுக்கப்பட்டுள்ளது. விதைகள் சேகரிக்கும் பணி தற்போது வரும் ஆகஸ்ட் தொடங்க உள்ளது.தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், நாட்டு நலப்பணி திட்டம் ,கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளின் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணியில் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் ஒரு லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். தமிழக ம் முழுவதிலும் இருந்து இதற்கான விதைகள் சேகரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள பனை வாரிய அலுவலகத்தில் இதற்கான ஆலோசனை முன்னேற்பாடு குறித்த கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் , ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் முன்னேற்பாடுகள் குறித்தும், விதை சேகரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.