மருமகளை கத்தியால் குத்தி 10 பவுன் நகை கொள்ளை-மாமனார் உட்பட 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சத்யா ( வயது 30) அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமனார் மணி. இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது . இந்த நிலையில் சத்யா நேற்று அங்குள்ள அலமேலு மங்கை காலனியில் நடந்து சென்றார். அப்போ அங்கு வந்த மாமனார் மணி அவரது தங்கை சித்ரா தங்கை கணவர் அங்கமுத்து என்ற ரமேஷ் ஆகியோர் சேர்ந்து சத்யாவை கத்தியால் குத்தி அவரிடம் இருந்த 10 பவுன் நகையை திருடிவிட்டனர். இதில் காயம் அடைந்த சத்யா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாமனார் மணி அவரது தங்கை சித்ரா தங்கை கணவர் அங்க முத்து ஆகியோரே தேடி வருகிறார்கள்..