மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு – வடமாநில சிறுவன் கைது..!

கோவை துடியலூர் பன்னிமடை அருகே ஆர். ஆர். அவென்யூ குடியிருப்பில் வசிப்பவர் சிவசங்கர். இவரது மனைவி பார்வதி ( வயது 64) இவர்கள் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் பார்வதி தனியாக இருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி கொடியை வீட்டில் வேலை செய்து வந்த பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து 3 மணி நேரத்தில் கொள்ளை நடத்திய வட மாநில சிறுவன்சஞ்சய் குமாரை கைது செய்தார். அவனிடம் இருந்த 10 பவுன் தாலி கொடியையும் கைப்பற்றபட்டது. கொள்ளை நடந்த 3 மணி நேரத்துக்குள் கொள்ளையனை கைது செய்து நகையை மீட்ட சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார். இதுபோன்ற பெயர் விலாசம் தெரியாத வெளி மாநில நபர்களை வேலைக்கு அமர்த்துவதை எவ்வளவு ஆபத்தானது? என்பதை பற்றியும் அவ்வாறு வைக்கும் பட்சத்தில் அவர்களின் முறையான ஆவணங்களை பெற்று வைக்குமாறும், மேலும் தாங்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இது போன்ற குற்ற செயல்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பொறுத்துமாறும் போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.