கோவையில் 1000 கிலோ குட்கா ,10 கிலோ கஞ்சா பறிமுதல் – மதுபான பார் சீல்..!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2 ஆயிரம் பழங்குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 400 போலீசார் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி கஞ்சா வேட்டையில் இக்குற்றவாளிகள் அனைவரின் இருப்பிடங்களையும் சோதனை செய்து , 10 கஞ்சா குற்றவாளிகள் மீது 10 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் விற்ற பார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பேரூர் வட்டாட்சியர் மூலம் சீல் வைக்கப்பட்டது..