பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவின்றி ஏறியதால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.
பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர்.
வெறும் unresverved டிக்கெட்டை வைத்துக்கொண்டு அனைத்து பெட்டிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அவதிக்குள்ளான பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் காரணமாக சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இந்த விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வடமாநிலத்தவர்கள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு பின்னர் ரயில் இயக்கப்பட்டது.