தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 51) இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் தங்கி உள்ளளார்.அங்குள்ள தனது மூத்த அண்ணன் இரும்பு குடோனில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு இவர் பேச்சு முத்து என்பவருடன் தன் அண்ணனின் குடோனில் பேசி கொண்டிருந்ததார். பின்னர் குடோனை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது கார், வேன் டிராக்டர் போன்ற வாகனங்களில் குடோனுக்கு வந்த ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது.அங்கிருந்த 6டன் பழைய இரும்பு , 2 பீரோ ஒரு மேஜை ஒரு பிரிட்ஜ் , ஒரு வாஷிங் மெஷின், ஒரு எல் இ டி டிவி 8 சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளயடித்துச் சென்று விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு 8 ரூ லட்சத்து 50 ஆயிரம் இருக்கும்..குடோன் நடத்தி வருபவர் அந்த இடத்து சொந்தக்காரருக்கு ரூபாய் 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.அந்த இடத்தை குடோன் அதிபர் அவருக்கு பதிவு செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தாராம். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் முத்தையா புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சிங்காநல்லூர் எஸ் .ஐ .எச் எஸ் காலனி சேர்ந்த பிரபு என்ற காலனி பிரபு ( வயது 36 )தாராபுரம் பக்கம் உள்ள சங்கரகண்டம் பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் ( வயது 30) திருச்சி அஜ்மதாலி (வயது 29) மதுரை,ஆரப்பாளையம் வீரபாரதி ( வயது 21) பென்னி (வயது 19)மதுரை மனோஜ் குமார் ( வயது 19) வீரையா என்ற புலி (வயது 27)பார்த்தசாரதி (வயது 16) பிரபு என்ற வெள்ளையன் பிரபு (வயது 24)மதுரை ஜெய்ஹிந்த்புரம் சங்கர் கணேஷ் என்ற சங்கர் ( வயது 24) ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பாலமுருகன் (வயது 26) மதுரை சிம்மக்கல் முகேஷ் ( வயது 22) மதுரை ஆராப்பாளையம் பார்த்தசாரதி ( வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 13 பேர் மீதும் மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கடத்தல் கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள்..