கோவை ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் உள்ள கிருஷ்ணபா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் லெனின் தாஸ் ( வயது 37) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மிட்டா என்பவரிடம் 264 கிராம் எடை கொண்ட 114 தங்க ஜிமிக்கிகளை பாலிஷ் போடுவதற்கு கொடுத்திருந்தார். அந்த நகைகளுடன் மிட்டா எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து லெனின் தாஸ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து மிட்டாவை தேடி வருகிறார்கள்..