கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று அங்குள்ள தெலுங்கு பாளையம் பிரிவு , ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ரோந்துசுற்றி வந்தார், அப்போது கஞ்சா விற்பனை செய்ததாக செல்வபுரம் ,சாஸ்தா நகரை சேர்ந்த ராஜா ( வயது 32) தெலுங்குபாளையம் புதூர் தினேஷ்குமார் என்ற பூச்சி தினேஷ் ( வயது 23) ஆகியோரை கைது செய்தார். இவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ 26 ஆயிரம் பணம், எடை மெஷின் பேக்கிங் கவர் பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல சிங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்றுஅங்குள்ள ராவுத்தூர் ரோடு பைபாஸ் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு கஞ்சா கடத்தி வந்ததாக சின்னியம்பாளையம் சாந்தகுமார் ( வயது 19) வரதராஜபுரம்கோகுல் என்ற கோகுல் கண்ணன் (வயது 22) உப்பிலிபாளையம் ஏ. கே . . நகர் ஆனந்தராஜ் ( வயது 30) மசக்காளிபாளையம் பிரிதிவிராஜ் ( வயது 21) சின்னியம்பாளையம் மாதவன் ( வயது 20) ராமநாதபுரம் ஸ்ரீ நகர் ஜெயராஜ் (வயது 30) குமரப்பன் ( வயது 48) ஆகியோரை கைது செய்தார் இவர்களிடம் 2 மூட்டைகளில் இருந்த 22 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பீளமேடு இன்ஸ்பெக்டர் கந்தசாமி சின்னியம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக திருப்பூர் போயம்பாளையம் அஜித் குமார் (வயது 23) நெரிக்கரிச்சல் மணிகண்டன் ( வயது 28) போயம்பாளையம் சக்தி நகர்,ராகுல் பாண்டி (வயது 18) ஆகியோர கைது செய்தார் இவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா 50 கவர்கள் கைப்பற்றப்பட்டது..