சென்னை: தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் போதை மாத்திரைகள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்து கட்ட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார் . ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் அன்பு சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் நேரடி மேற்பார்வையில் சென்ட்ரல் ரயில் நிலையம் 6 வது பிளாட்பார்மில் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி முதல் நிலை காவலர் சரத்குமார் மற்றும் காவலர் அரவிந்தன் ஆகியோர் தன்பாத் ஆலப்புழா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணிகளை சோதனை வேட்டையில் ஈடுபட்டன. அப்போது 2 பேர் போலீசை பார்த்ததும் சலாம் சார் என கூ ழை கும்பிடு போட்டனர். போலீசார் அவர்களை பார்த்ததும் சந்தேகப்பொறி ஏற்படவே அவர்களை அழைத்து வைத்திருந்த பையை சோதனை போட்டனர். சோதனையில் ஆளையே தூக்கும் உல்லாச கஞ்சா 12 கிலோ பிடிப்பட்டது .அவர்கள் பெயர் விபரம் வருமாறு 1. அசோக் குமார் ரோகிதாஸ் வயது 28.தகப்பனார் பெயர் துவாஸ் ராம் ரோகிதாஸ் சாகூரா டாகா
ஜான் ஜி கிர் சாம்பா சதீஷ் கர் மாநிலம் 2.முகமது நஹீம் வயது 25. தகப்பனார் பெயர் முகமது நாசிம் ராம் நகர் சந்து கார்டன் ரீச் போஸ்ட் கொல்கத்தா மாவட்டம்
மேற்கு வங்க மாநிலம் இவர்கள் இருவரையும் சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்பு நீதிமன்றத்திற்கு அழைத்தது செல்லப்பட்டனர் . பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..