ஆன்லைனில் பர்சஸ் செய்ததனால் பம்பர் பரிசாக கார் விழுந்ததாக கூறி முதியவரிடம் 12 லட்சம் மோசடி..!

ஆன்லைனில் பர்சஸ் செய்ததனால் விழுந்தது பம்பர் பரிசு என முதியவரிடம் மோசடி.. சைபர் கிரிமினல்களிடம் பரிதாபமாக பனிரெண்டு லட்சத்தை பறிகொடுத்த பாமரன்..

கோவை சார்ந்த அபு சமாத் என்ற முதியவர் ஆன்லைனில் பொருள் வாங்கிய நிலையில், பொருள் வாங்கியதற்காக கார் பரிசு விழுந்ததாக வாட்ஸப்புக்கு தகவல் வந்தது. முதியவர் அதனை நம்பிய நிலையில் வாட்ஸப்பில் உரையாடியானர். அதனை சைபர் ஆசாமிகள் சாதகமாக்கி கார் டெலிவரி எடுக்க மோட்டார் இன்ஸூரன்ஸு , டேக்ஸ் , பிராசசிங் ஃபீ கட்ட வேண்டும் என பணம் கேட்டனர். அதனை நம்பிய முதியவர் சேமிப்பு தொகை மற்றும் தனது குடும்பத்தாரிடமிருந்து கடன் வாங்கி 12 லட்சம் ஆன்லைனில் செலுத்தினார். பணம் கட்டியும் கார் வராததனால் சந்தேகமடைந்த முதியவர் பின்னர் ஏமாந்ததனை உணர்ந்தார். இதுகுறித்து தரப்பட்ட புகாரின் அடிப்படையில் சிட்டி சைபர் கிரைம் போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..