ரூ.12 லட்சம் மதிப்புள்ள அதிக போதை ஏற்றும் கஞ்சா கூடுவாஞ்சேரி யில் பறிமுதல் – 2 பேர் கைது..!

தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதாகவோ கடத்தி வருவதோ அதிரடியாக முற்றிலும் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் முனைவர் அ.அமல் ராஜா வால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிரடி போலீஸ் படையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர்.கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே சிலர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் 2 பேர் சந்தேகபடும்படியாக நின்று கொண்டு கல்லூரி மாணவர்களிடம் போதை ஆசாமிகளிடம் எங்க கிட்ட இருக்கும் சரக்கு இங்க எங்கும் கிடைக்காத கஞ்சா என பேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் கெஞ்சிய அவர்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுத்து விடுகிறோம் எங்களை விட்டு விடுங்கள் என கதறினர். எதற்கும் மயங்காத போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கொர் ராபீமேஸ்வர் ராவ் வயது35. தகப்பனார் பெயர் நரசிங்கராவ் மற்றொரு குற்றவாளி பெத்துராஜீ ரமணா வயது 43. தகப்பனார் பெயர் லக்கு மையா என விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ12 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த கஞ்சா விசாகப்பட்டினம் பகுதியில் விளையும் அதிகம் போதை ஏற்றும் சூப்பர் கஞ்சா என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்..