கோவை ஒண்டிப்புதூர் இருகூர் ரோட்டில் உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 54) இவர் அந்த பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மளிகை கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வீட்டை பூட்டிவிட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆலயத்துக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தாலி செயின் , ஒரு ஜோடி கம்மல், ஒரு மோதிரம், ரூ25 ஆயிரம்பணம்,2 செல்போன் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆனந்தகுமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.