கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு,பகுதியில் ரோம் சுற்றி வந்தனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர் .அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர் விசாரணையில்அவர்கள் உக்கடம் லாரி பட்டியை சேர்ந்த முகமத் பாருக் (வயது 35 )தெற்கு உக்கடம் அவுசிங் யூனிட் புல்லுக்காடு பாலமுருகன் (வயது 22)சாரமேடு கரும்புக்கடை வள்ளல் நகர் அனிஸ் ரகுமான் (வயது 23)என்பது தெரிய வந்தது.தப்பி ஓடிய கோட்டைமேடு, வின்சென்ட் ரோட்டை சேர்ந்த முகமத் தாரிக் என்பவரை தேடி வருகிறார்கள்.இவர்கள் இந்த மாத்திரைகளை பெங்களூரில் ஒரு மாத்திரை ரூ. 50 க்கு வாங்கி வந்து கோவையில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிவந்தது.