விடுதி அறையில் அடைத்து மாணவரை சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்கள் 13 பேர் சஸ்பெண்ட்.!!

கோவை அருகே உள்ள நேரு கல்லூரியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் .இந்த கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் அறையில் கடந்த ஒரு மாதமாக பணம் திருட்டுப் போனது. அதை விடுதியில் தங்கி எம்.எஸ்.சி படித்து வரும் மாணவர் ஒருவர் திருடியதாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று எம்.எஸ்.சி படிக்கும் அந்த மாணவரை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அடைத்து வைத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் சரமரியாக தாக்கினார்கள். இது பற்றி அந்த மாணவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பெற்றோர் விடுதிக்கு வந்து அந்த மாணவரை அழைத்து சென்றதுடன், கல்லூரி நிர்வாகத்திலும் புகார் செய்தனர். அதன் பேரில் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி அந்த மாணவரை தாக்கிய 13 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவரை அறையில் அடைத்து வைத்து சக மாணவர்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.