சேவல் சண்டை சூதாட்டம் 13 பேர் கைது.

11 வாகனங்கள் பறிமுதல் கோவை ஏப் 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சிஊஞ்ச வேலாம்பட்டி, புவனேஸ்வரி நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கௌதம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ( 50 ) மணிவாசகம் ( 57 ) தமிழன் ( 35 ) பார்த்தசாரதி ( 31 ) சேதுபதி கிருஷ்ணன் ( 33 )சந்திரசேகர் (43) கார்த்திக் (33 )பிரேம் குமார் ( 26 ) கதிர்வேல் (35) யோகேஷ் ( 22 ) பரத்குமார் (19) கணேசன் (40) ராஜன் ( 34 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களும், 2 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.