கோவை அருகே உள்ள காளப்பட்டி வீரியம்பாளையம் ரோடு, கிருஷ்ணா பார்க்கில் வசிப்பவர் சண்முகசுந்தரம் ( வயது64) மின்வாரியத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவரது வீட்டில் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி விட்டனர்.கடந்த மாதம் 21 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது உறவினர் இல்ல திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார்.அப்போது யாரோ இதை திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.இது குறித்து சண்முகசுந்தரம் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.