கள்ளச்சாராயம் விற்ற 136 பேர் கைது… இதுவரை 199 வழக்குகள் பதிவு… தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை..!

 தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சாராய வியாபாரிகள் 57 பேர் கைதாகியுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 450 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் கைது; 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது; 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்ததை அடுத்து டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்கிறார். வனப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.