கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே பகுதி சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் கைது செய்யபட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமாருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டார் .இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள முருகனிடம் போலீசார் நேற்று வழங்கினர்..
14 – வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!
