குஜராத்தின் கட்ச் மற்றும் கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு..!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த பிபர்ஜாய் புயலானது குஜராத் மாநிலம் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே ஜூன் 15ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

அதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மற்றும் கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புயல் கரையை கடக்கும் வரை அம்மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 16ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.