சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் வேலை நாள் என பலரும் எண்ணினர். சிலர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதியை மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் 7ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. எனவே, அதனுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில், இந்த வாரமும் வெள்ளிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர்ந்து விடுப்பு கிடைத்த மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.