கோவை அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சந்திரமதி . இவர் மாச்சம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் – விநாயகர் திருக்கோவில் தக்காராகவும் (பொறுப்பு) உள்ளார். இவர் சுந்தராபுரம் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் மாச்சம்பாளையம். அருள்மிகு மாரியம்மன் – விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி – தங்க சாமான்களை சிட்கோ எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த முன்னாள் டிரஸ்டி செங்கதிர் பிரகாஷ் மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.