கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-புத்தாண்டை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி இரவு 1500 போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பெண்களை கேலிக்கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கோவையில் 31-ந்தேதி இரவில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் ,அதி வேகமாக வாகன ஓட்டுபவர்களை பிடிக்க 20 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட உள்ளது.குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.மது
போதை குறையும் வரை அங்குள்ள நாற்காலியில் இருக்க வைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் 31-ந் இரவு 10 மணிக்கு மூடப்படும்.முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல் விளக்குகள் விடிய விடிய இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விபத்து இல்லாத புத்தாண்டாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் குவிப்பு-குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை..!
