சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.87 லட்சத்திற்கு 1532 வாழைத்தார்கள் ஏலம்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது. முன்தினம்  நடைபெற்ற ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், உக்கரம், பெரியூர், செண்பகபுதூர், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1532 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்காக 13 வியாபாரிகள் வருகை தந்தனர். இதில் பூவன் தார் ஒன்று  ரூ.590 க்கும், தேன்வாழை ரூ.640 க்கும், செவ்வாழை ரூ.860 க்கும், ரஸ்தாளி ரூ.480 க்கும், பச்சை நாடன் ரூ.410 க்கும், ரொபஸ்டா ரூ.460 க்கும், மொந்தன் ரூ.510 க்கும், கதலி ஒரு கிலோ ரூ.57 க்கும், நேந்திரன் ரூ‌.43 க்கும் ஏலம் போனது. மொத்தம் 1532 வாழைத்தார்கள் ரூ.1.87 லட்சத்திற்கு விற்பனையானது.