வீர கேரளம் டாஸ்மாக் பாரில் பதுக்கி வைத்திருந்த 1631 மது பாட்டில் பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் டாஸ்மாக் (கடை எண் 1533) அருகே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும், அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது. உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கன்னையன்,சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது பாரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1631 மது பாட்டில்களும், ரூ.350 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பா பாரில் இருந்த சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்,எஸ். எஸ். நகரை சேர்ந்த கார்த்திக் ( வயது 38) புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த வீரசிங்கம் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..