கோவையில் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 17 பேர் கைது..!

கோவை : தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதற்கு அரசு கால நேரம் நிர்ணயித்திருந்தது. இதை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அரசு விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததாக காந்திபுரம் 5-வது வீதியைச் சேர்ந்த கோபால் சிங் ( 23 ) கைது செய்யப்பட்டார் .

இதேபோல ரேஸ்கோர்ஸ் பகுதியில் பட்டாசு வெடித்த மோகித் ஜெயின் ( வயது 32) சாய்பாபா காலனியில் பட்டாசு வெடித்ததாக செல்வகுமார் ( வயது 34) மற்றும் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்ததாக விஸ்வநாதபுரம் வினோத்குமார் (வயது 33) துடியலூர் பாதுஷா ( வயது 38 ) துடியலூர் அண்ணாதுரை ( வயது 49) ரங்கம்மாள் காலனி தீபக் (வயது 29) என்ஜி.ஜி ஓ காலனி ஜித்தன் ( வயது 35) ஸ்ரீதேவி நகர் ராஜேஷ்குமார் (வயது 20) புலியகுளம் பாப்பநாயக்கன்பாளையம் கணேசன் (வயது 44) பாண்டியன் (வயது34) தாமு (வயது24) கரும்புக்கடை பிலால் எஸ்டேட் முகமத் சாகின், ( வயது 21) சிங்காநல்லூர் அகிலன் ( வயது29),ராபியன் ( வயது 40) நீலி கோணாம் பாளையம் குமார் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது..