கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள டி. வி. எஸ் .நகர் 3 -வது வீதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது 17 வயது மகன். ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை கார்மேகம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த சிறுவன் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்ததாகவும், ஒரு இளம் பெண்ணை “இன்ஸ்டாகிராம் “மூலம் காதலித்து வந்தது தெரிய வந்தது. அந்தப் பெண் சிறுவனிடம் ஒரு வாரம் பேசாததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது..
இன்ஸ்டாகிராம் காதலால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..
