பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பெரும் அடியாக, அவரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 18 தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் ஜனதா தளத்தில் இன்று இணைந்தனர்.
ஆர்எல்ஜேடி தலைவர் குஷ்வாஹா விராசத் பச்சாவ் யாத்ராவின் முதல் கட்டத்தை முடித்த பிறகு, 18 ஐக்கிய ஜனதா தள தலைவர்களை இன்று தனது கட்சியில் சேர வைத்தார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்கள் ஷம்புநாத் சின்ஹா, கயா மாவட்டத்தின் கிசான் செல்லின் முன்னாள் மாவட்டத் தலைவர் சதீஷ் சர்மா, கிசான் செல்லின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ராஜ் கிஷோர் சிங் மற்றும் கல்விப் பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் இ.சஷிகாந்த் ஆகியோர் அடங்குவர்.
முன்னதாக பிப்ரவரியில், உபேந்திர குஷ்வாஹா நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். குஷ்வாஹா பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுத்தார். அந்தக் கூட்டத்தில், எதிர்கால அரசியல் வியூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளை கட்சி தொண்டர்களிடம் கேட்டறிந்தார்.