கோவை மதுவிலக்கு அமல் பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நேற்று சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் – நால் ரோடு சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 115 கிராம் கஞ்சா, 180 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பக்கம் உள்ள போத்தம்பட்டியை சேர்ந்த சிவசாமி மகன் சதீஷ் என்ற கருணாமூர்த்தி ( வயது 26 ) என்பது தெரிய வந்தது . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
180 போதை மாத்திரைகள் , கஞ்சா பறிமுதல் – வாலிபர் கைது..!
