இருகூரில் 182 மதுபாட்டில்கள் பறிமுதல் – ரியல் எஸ்டேட் அதிபர் கைது.!!

கோவை இருகூர் 4 கார்னர் சந்திப்பில், உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது . இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சட்ட விரோதமாக 182 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருகூர் ஏ. ஜி. புதூர் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற அசோக் குமார் ( வயது 46) கைது செய்யப்பட்டார் .இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..