கோவை ராம் நகர், சரோஜினி வீதியை சேர்ந்தவர் முஷ்ரதுல்லா.இவரது மனைவி செரின் ( வயது 32) இவர் கடந்த 11 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டனர். நேற்று திரும்பி வந்தனர் . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் பணம் ரூ92 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை . இது குறித்து ஷெரின் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..