ரூ.2.50 கோடி மோசடி – மகள் மீது தந்தை பரபரப்பு புகார்.!!

கோவை பீளமேடு அருகில் உள்ள நேரு நகர் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 68) தொழிலதிபர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறார். மூத்த மகள் அபிநயா (வயது 35 )தந்தையின் வீட்டின் அருகில் வசித்து வந்தார். இவரது கணவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார் .இந்த நிலையில் அபிநயா தனது தோழி ஜெயசுதா, நண்பர்கள் கேசவமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து தங்கராஜிடம் நிலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வாரத்தை காட்டியுள்ளனர். இதை நம்பி தங்கராஜ் 2 தவணையாக அபிநயா வடம் தலா ரூ 90 லட்சம் என்று ரூ 1 கோடியே 80 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி நிலத்தில் முதலீடு செய்யாமல் சென்னையில் வீடு வாங்கியதாக தெரிகிறது. மேலும் அபிநயா தனது தந்தை தங்கராஜிடம் சொத்தை பிரித்து தர கூறி 17 ஏக்கர் நிலத்தை தனது தோழியின் பெயரில் தானமாக பதிவு செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் அபிநயா நிலத்தில் முதலீடு செய்வதாக கூறி தங்கராஜ் வீட்டில் இருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள், நில ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று உள்ளார்.பின்னர் அபிநயா தந்தையிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதையடுத்து தங்கராஜ் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் நிலத்தில் முதலீடு செய்வதாக கோரி மகள் , தோழி  நண்பருடன் சேர்ந்து தன்னிடம் ரூ 2 கோடி 50 லட்சம் சுருட்டியது தெரியவந்தது .இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.