கோவை கணபதியை சேர்ந்தவர் டெனிசன் ( வயது 45) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஜூசர்சைபுதீன் ( வயது 69)) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் டெனிசனிடம் தான் பீளமேட்டில் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும் இதில் முதலீடு செய்தால் மாதம் 13 சதவீதம் வட்டி தருவதாகவும் கூறினார். அதை நம்பிய டெனிசன் பீளமேடு சென்று ஜூசர் சைபுதீன் ,அவரது மனைவி ஜமீனா (வயது 60) மகன்கள் மோதின் ( வயது 32),ஜூசர் உசைபா( வயது 28 )மருமகள் கைனப்(வயது 27)ஆகியோரிடம் ரூ.2 கோடியே 50 லட்சம் கொடுத்தார் .ஒரு சில மாதங்கள் மட்டும் அவருக்கு மாதந்தோறும் வட்டி கொடுத்தனர் .பின்னர் வட்டி கொடுக்கவில்லை. .இது தொடர்பாக டெனிசன் பலமுறை நேரிலும், செல்போன் மூலமும் அவர்கள் 2 பேரிடமும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதிலளிக்காமல் காலம் கடத்தி வந்தனர் .இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது அது மூடப்பட்டிருந்தது .இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டெனிசன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஜூசர் சைபுதீன் , ஷமினா, மோதின் ஜூசர் உசைபா, மருமகள் கைனப் ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த ஜூசர் சைபுதீன் .அவரது மகன் ஜூசர் உசைபா ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஷமீனா, மோதின் கைனப் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள். மேலும் அவர்கள் வேறு யாரிடமாவது இப்படி மோசடி செய்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..