கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் எழுத்தாளர்கள் கோவில் காசாளர் வழங்கி மறுநாள் காலை கல்வீரம்பாளையத்தில் உள்ள வங்கியில் கோவிலின் கணக்கில் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கோவில் டிக்கெட் எழுத்தராக உள்ள தீனதயாநிதி என்பவர் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மட்டும் கோவில் காசாளரிடம் வழங்கி உள்ளார். அதேபோல் மேலும் வசூலான ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 370 ரூபாயையும் வழங்கவில்லை. இதனால் கோவில் பணம் 2.50 லட்சம் ரூபாய் கோவில் வங்கி கணக்கு செல்லாமல் இருந்தது. கோவில் காசாளர் இதனை பரிசோதனை செய்த போது டிக்கெட் எழுத்தர் தீனதயா நிதி கோவில் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. தீனதயாநிதி விடுப்பில் சென்று விட்டார். கையாடல் குறித்து அறிந்த கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி தீனதயா நீதியின் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதன் பின்பு தீன தயாநிதி 2.50 லட்சம் ரூபாய் கோவிலில் திருப்பி செலுத்தி உள்ளார். பணம் கையாடல் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது குறித்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கூறும் பொழுது :-
சிறப்பு தரிசனம் கட்டணத்தில் கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக, புகார் எழுந்த நிலையில் அதனை கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி, அறங்காவலர் குழுவை அழைத்து ஆலோசனை நடத்தாமல், அவர்களுக்கு இது பற்றி தெரிவிக்காமல் கையாடல் செய்த நபர்கள் மீது காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் தற்போது தகவல் தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்தார், மேலும் துணை ஆணையர் ஹர்ஷினி கோவிலில் நடைபெற்ற இது போன்ற கையாடலை உடனடியாக அறங்காவலர் குழுவினரிடம் உடனடியாக முறையாக தெரிவிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இது குறித்து துணை ஆணையர் ஹர்ஷினி கூறும் போது:-
கோவில் பணத்தை கணக்கால்வரிடம் செலுத்தாததால் வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது கோவில் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எழுத்தாளர் தீன தயாநிதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறங்காவலர் குழுவிற்கு தீர்மானம் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
கோவிலில் வசூலாகும் பணத்தை முறைகேடாக கையாடல் செய்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பக்தர்களின் நம்பிக்கை சீர்குலைக்காமல், இது போன்ற குற்றங்கள் நடைபெறாது என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.