கார்களை உடைத்து உதிர்பாகங்களை விற்ற 2 பேர் கைது: குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!!!

கார்களை உடைத்து உதிர்பாகங்களை விற்ற 2 பேர் கைது: குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!!!

கோவையில் கார்களை அடகு வைப்பதாக நடந்த மோசடி தொடர்பாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் மோசடி செய்த கார்களை கோவை கரும்புக்கடை சாராமேடு பகுதியில் சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் கொடுத்ததாக வெங்கடேஷ் தெரிவித்தார். இதை அடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி ரியாஸ் என்பவரை கைது செய்தனர். இவர் 13 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அத்தோடு ரியாஸ் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரிடம் மூன்று கார்களை கொடுத்து உள்ளார். அந்த கார்களை ரவி உடைத்து உதிரிபாகங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. கைதான ரியாஸ், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வகையில் மொத்தமாக ரூபாய் 1 கோடி மதிப்பிலான 16 கார்களை உடைத்து உதிரிபாகங்களை விற்றது தெரிய வந்தது. இதனால் கார்களின் உரிமையாளர்கள் தற்பொழுது கோவை மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்து வருகின்றனர். கோவையில் இது போன்ற மோசடி நடைபெறுகிறதா? என்று தீவிர விசாரணை நடைபெறுகிறது. மேலும் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கார்களை வாங்குவது அதை உடைத்து உதிரிபாகங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.