கோவை குனியமுத்தூர் நாகம்மா நாயக்கர் விதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் நேசமணி ( வயது 22) இன்ஜினியர். இவர் தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த சன்பர் (வயது 26) என்பவரிடம் தனது காரை அடகு வைத்து ௹ 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். 2 மாதம் கழித்து அந்த பணத்தை கொடுக்க சென்றார். அப்போது சன்பர், சாகர், சபீர் ,யூசுப் ஆகியோர் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர்..இது குறித்து நேசமணி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தெற்கு உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த சன்பர் (வயது 26) மதுக்கரை விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த சாகர் (வயது 29) ஆகியோரை நேற்று கைது செய்தனர் . சபீர், யூசுப் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கோவை இன்ஜினியர் அடகு வைத்த காரை மோசடி செய்த 2 பேர் கைது..!
