கோவை :ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதி ஆண்டு படித்து வருகிறார் . இதற்காக இவர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார் .அந்தப் பெண்ணுக்கு கோவை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது .அவர் மூலம் புது சித்தாபுதூரை சேர்ந்த ராஜு (வயது 32) என்பவர் அறிமுகமானார். ராஜூக்கு ஈரான் நாட்டு மொழி பேச தெரியும். இதனால் அவரிடம் அந்த பெண் நட்பாக பழகினார் .இதை பயன்படுத்திக் கொண்ட ராஜு சம்பவத்தன்று இரவில் அந்தப் பெண்ணை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கிளப்பிற்கு உணவு சாப்பிட அழைத்துச் சென்றார். அங்கு ராஜுடன் அவரது நண்பர் நண்பரான நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ் ( வயது 40) என்பவரும் இருந்தார். அவர்கள் மது குடித்திருந்தனர் .மேலும் அந்தப் பெண்ணையும்மது குடிக்க கட்டாயப்படுத்தினர்.அதற்கு அவர் மறுத்தார். தொடர்ந்து வற்புறுத்தியதால் அவர் அந்த கிளப்பி விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேரும் நடுரோட்டில் வைத்து வெளிநாட்டு பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறு செய்தனர். இது பற்றிதகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் ஈரான் நாட்டு பெண் அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜு மற்றும் அவரது நண்பர் ஜோன் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர் .2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..