கோவை ஏப் 25 கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறு செய்தாரம். அதை தட்டிக்கேட்ட பொதுமக்களை கத்தி யை காட்டி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதே போல கோவையை சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிருஷ்ணகிரியை சேர்ந்த மொட்டையன் ( வயது 40) என்பவரை அனைத்து பெண்கள் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின்மொட்டையன், கார்த்திக் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் உள்ள அவர்கள் இருவருக்கும் நேற்று வழங்கப்பட்டது.
குண்டர்தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது.
