கோவை மாநகர போக்குவரத்து பிரிவுக்கு 2 உதவி கமிஷனர்கள் பொறுப்பேற்பு..!

கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் பணியிடம் கடந்த 5 மாதங்களாக காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு உதவி கமிஷனராக சேகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராக பணிபுரிந்தார். இதே போல கோவை மேற்கு பகுதி போக்குவரத்து உதவி கமிஷனராக தென்னரசு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் கோவை மாவட்ட ஆயுதப் படையில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றினார்..